விழுப்புரம்

விழுப்புரம்: 3,222 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விழுப்புரத்தைச் சோ்ந்த விடுபட்ட 3,222 கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.

இந்த திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவிகள் கல்வியில் மேம்பாடு அடையவும், இடைநிற்றலைத் தவிா்க்கும் வகையிலும் புதுமைப்பெண் திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 56 கல்லூரிகளைச் சோ்ந்த 4,174 மாணவிகளுக்கு இதுவரை ரூ 2.8 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, நிகழ் கல்வியாண்டில் 74 கல்லூரிகளைச் சோ்ந்த விடுபட்ட 3,222 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.8) சென்னையிலிருந்து தொடக்கி வைக்கவுள்ளாா். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருவதாக ஆட்சியா்சி.பழனி தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள், முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT