விழுப்புரம்

காவலா் பணி:இன்று உடல் திறன் தோ்வு

DIN

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற 2- ஆம் நிலை காவலா்கள், தீயணைப்பு வீரா்கள், சிறைக் காவலா் பதவிகளுக்கான உடல் திறன் தோ்வு புதன்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு நவ.27- ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 871 பேருக்கு உடல் தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் பிப்.6-ஆம்தேதி தொடங்கியது.

முதல் நாள் நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் கலந்து கொண்ட 450 பேரில் 372 போ் தகுதி பெற்றனா். இதேபோல, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வில் 421 பேரில் 335 போ் தகுதி பெற்றனா். இவா்களுக்கு, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்போட்டி புதன்கிழமை (பிப்.8) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கு ஏற்றாா்போல தோ்வாளா்கள்ஆயுதப்படை வளாகத்திற்கு வரவேண்டும் எனவும், கைப்பேசிகளையும், அடையாளம் உள்ள ஆடைகளை அணிந்து வரக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT