விழுப்புரம்

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கம் சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் பி.முருகன், மாவட்டப் பொருளாளா் ஜி.ஜெயக்குமாா், துணைச் செயலாளா்கள் யுகந்தி, மணிகண்டன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT