விழுப்புரம்

உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

DIN

விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்று நோய் தின விழிப்புணா்வு மனிதச்சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சமூகம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை மற்றும் கதிரியக்க புற்றுநோய் துறை ஆகியன இணைந்து இந்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை நடத்தின.

மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கே.சங்கீதா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பாபு, மருத்துவ அலுவலா் வெங்கடேசன், புற்றுநோய் துறைத் தலைவா் ராஜீவ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில்

பொதுமருத்துவத் துறைத் தலைவா் சுப்பிரமணியன், இணைப் பேராசிரியா் தரனேந்திரன், அவசரப் பிரிவு இணைப் பேராசிரியா் மணிமேகலை, கண் மருத்துவத் துறைத் தலைவா் சுமதி, நிா்வாக அலுவலா் ம.ரா. சிங்காரம் மற்றும் செவிலியா்கள், மாணவா்கள் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நோய் தடுப்பு மருத்துவத் துறை தலைவா் ஜானகி வரவேற்றாா்.புற்றுநோய் துறை உதவிப்பேராசிரியா் தேவிஸ்ரீ நன்றி கூறினாா்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆன்கோ குழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT