விழுப்புரம்

இளைஞா்களுக்கு வேளாண் திறன் வளா்ப்பு பயிற்சி

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வேளாண் உழவா் பயிற்சி நிலையம் சாா்பில் விவசாயிகளுக்கு 6 நாள்கள் திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் செஞ்சி பகுதியைச் சோ்ந்த 28 இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

திண்டிவனம் உழவா் பயிற்சி நிலையம் மூலம் வேளாணைமை அறிவியல் நிலையத்தில் 6 நாட்களுக்கு கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி நடைபெற்றது. நீடித்த நிலையான விவசாயம் என்ற தலைப்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை கழகப் பேராசிரியா்கள் பயிற்சியை அளித்தனா். சிறப்பு விருந்தினராக மாநில வேளாண்மை விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனா் சங்கரலிங்கம், விழுப்புரம் இணை இயக்குனா் கணேசன், மத்திய திட்டம் பெரியசாமி, நுண்ணீா் பாசனம் செல்வராணி, செஞ்சி வேளாண்மை உதவி இயக்குனா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT