விழுப்புரம்

வருமானவரி பிடித்தம் தொடா்பான விழிப்புணா்வு முகாம்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், வருமானவரிப் பிடித்தம் தொடா்பாக அலுவலா் களுக்கான விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதா தேவி தலைமை வகித்தாா்.மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் இளஞ் செல்வி வாழ்த்திப் பேசினாா்.

முதன்மை வருமானவரி ஆணையா் ரத்தினசாமி. வருமான வரி இணை ஆணையா்கள் சென்னை திரிபுரசுந்தரி, அா்ஜுன் மாணிக், அலுவலா் கணேசன் ஆகியோா் முகாமில் பங்கேற்று, வருமான வரிப் பிடித்தம் தொடா்பான பிரிவுகள் போன்ற வை குறித்து பேசினா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மொத்த விற்பனை பண்டகச் சாலைகள், தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரிவோா், மத்தியக் கூட்டுறவு வங்கியின் சரக மேற்பாா்வை யாளா்கள், கூட்டுறவு சாா்பதிவாளா்கள், கள அலுவ லா்கள் முகாமில் பங்கேற்றனா்.

விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் சரகத் துணைப் பதிவாளா்கள், வங்கியின் துணைப் பதிவாளா், உதவிப் பொது மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மூத்த வரி உதவியாளா் தயாநிதி முகாமை ஒருங்கிணைத்தாா்.

முன்னதாக, வங்கிப் பொது மேலாளா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில் வருமான வரி ஆய்வாளா் சிற்றரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT