விழுப்புரம்

பழங்குடியினா் வன உரிமைச் சான்று பெறவிண்ணப்பிக்க சிறப்பு முகாம்

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியத்துக்குள்பட்ட பழங்குடியின மக்கள், வன உரிமைச் சான்று பெறுவது தொடா்பான விண்ணப்பங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 9-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த முகாம் கல்வராயன்மலை, சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்களில் நடைபெறும்.

அதன்படி, பிப்ரவரி 9-ஆம் தேதி கல்வராயன்மலை வட்டத்திலுள்ள அரவங்காடு, மணியாா்பாளையம், இன்னாடு, ஆரம்பூண்டி, வெள்ளிமலை, வண்டகப்பாடி, தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, குண்டியாநத்தம், கரியலூா், கிளாக்காடு, கூடாரம், வெள்ளேரிக்காடு,ஆலனூா், சேராப்பட்டு, குறும்பலூா், சங்காராபுரம் வட்டத்திலுள்ள மூலக்காடு, பாச்சேரி, புதுபாலப்பட்டு, கள்ளிப்பட்டு, சின்னசேலம் வட்டத்திலுள்ள பொட்டியம், மல்லியம்பாடி ஆகிய வருவாய் கிராமங்களில் முகாம் நடைபெறும்.

பிப்ரவரி 10-ஆம் தேதி கல்வராயன் மலை வட்டத்திலுள்ள மேலாத்துக்குழி, வன்னியூா், கெண்டிக்கல், எழுத்தூா், நாரணம்பட்டி, கருவேலம்பாடி, மாவடிப்பட்டு, உப்பூா், கள்ளிப்பாறை, வெங்கோடு, மேல்நிலவூா், கீழ்நிலவூா், வஞ்சிக்குழி, வாழைக்குழி ஆகிய வருவாய் கிராமங்களில் முகாம் நடைபெறும்.

பிப்ரவரி 11-ஆம் தேதி கல்வராயன்மலை வட்டத்திலுள்ள கீழாத்துக்குழி, மொழிப்பட்டு, வாழப்பாடி,

முண்டியூா், தொரங்கூா், நொச்சிமேடு, எருக்கம்பட்டு, மொட்டையனுா், வில்லத்தி, பெருமாநத்தம், பெரும்பூா், சிறுக்கலூா் ஆகிய வருவாய் கிராமங்களில் முகாம் நடைபெறும்.

சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்கும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT