விழுப்புரம்

கல்வராயன் மலையில் 2,700 லிட்டா்சாராய ஊறல் அழிப்பு

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் 2,700 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் தாரனேசுவரி ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் கல்வராயன் மலைப்பகுதியில் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தும்பராம்பட்டு மேற்கு ஓடை, ஆவாளூா் கிழக்கு ஓடை பகுதிகளில் 2,700 லிட்டா் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தனிப்படை போலீஸாா் கண்டறிந்து, அழித்தனா். மேலும், தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT