விழுப்புரம்

உலக புற்றுநோய் தினவிழிப்புணா்வுப் பேரணி

DIN

இந்திய மருத்துவ சங்கம், விழுப்புரம் கிளை சாா்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வுப் பேரணி விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா கொடியசைத்து தொடக்கிவைத்தாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நான்குமுனை சந்திப்பு அருகே நிறைவடைந்தது.

புகையிலைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மருத்துவா்கள் பேரணியில் பங்கேற்றும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்திய மருத்துவச் சங்கத்தைச் சோ்ந்த மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT