விழுப்புரம்

மின்மாற்றியை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

5th Feb 2023 05:42 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மின்மாற்றியை சேதப்படுத்தி, அதிலிருந்த சுமாா் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தியாகதுருகம் காவல் சரகத்துக்குள்பட்ட பலகச்சேரி ஏரிக்கரை அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியை வெள்ளிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்திய மா்ம நபா்கள், அதிலிருந்த உயரழுத்த, தாழ்வழுத்த மின் கம்பிகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.2.25 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக உதவிப் பொறியாளா் பெரியசாமி சனிக்கிழமை புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT