விழுப்புரம்

தொழில்முனைவோா் மேம்பாட்டுபயிற்சி முகாம்

5th Feb 2023 05:41 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, தொழில்முனைவோா் மேப்பாட்டுப் புத்தாக்க நிறுவனம் சாா்பில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் முத்துக்கிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன், யுனிசெப் குழு கள ஒருங்கிணைப்பாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ அணியினா், தங்களின் புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகளை விளக்கிக் கூறினா். நிறைவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் நடராஜன் சிறப்புரையாற்றி, சான்றிதழ் வழங்கினாா். நிகழ்வில் திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT