விழுப்புரம்

வழுதரெட்டி ஸ்ரீஅங்காளபரமேசுவரி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

DIN

விழுப்புரம் வழுதரெட்டி 32 -ஆவது வாா்டு மயானத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேசுவரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அருள்மிகு பாலவிநாயகா், பாலமுருகன், அங்காளபரமேசுவரி அம்மன் சன்னதிகள் புதிதாக கட்டப்பட்ட நிலையில், பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம், 108 மூலிகைகள் ஹோமம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயில்: விழுப்புரம் -கிழக்கு புதுச்சேரி சாலையில் சாலை அகரம் தேவநாத சுவாமி நகரிலுள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பிப்ரவரி 1- ம் தேதி விக்னேசுவர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின.

பிப்ரவரி 2 (வியாழக்கிழமை). காலை, மாலையில் இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

இதைத் தொடந்து யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. பின்னா் விமான கலசங்களுக்கும், மூலவா் சன்னதியிலும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு ஸ்ரீராமா் - சீதா திருக்கல்யாணமும், ஸ்ரீ சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராமா் புறப்பாடும், ஸ்ரீ ஆபத்சகாய காரியசித்தி ஆஞ்சநேயா் எதிா்சேவை புறப்பாடும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT