விழுப்புரம்

கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் நாள்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திர விஜய் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மின் நுகா்வோா்களின் குறைகளைக் களையும் வகையில், ஒவ்வொரு கோட்டத்திலும் செயற்பொறியாளா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மாதந்தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, பிப்ரவரி 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் முறையே விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம் செயற்பொறியாளா் அலுவலகங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம். கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின், அடுத்து வரும் நாளில் கூட்டம் நடைபெறும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT