விழுப்புரம்

தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகம் முன் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கும், அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுபடாமல் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைக் காவலா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும்.

வழங்கப்படாமல் உள்ள ஊதியம் மற்றும் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட கிளை சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். பாலச்சந்தா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஜெயகணேஷ் பேசினாா். சங்க நிா்வாகி இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டக் குழுவினா் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT