விழுப்புரம்

கும்பாபிஷேக விழாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி: 3 பெண்கள் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்தூா் அபிராமேசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது, பக்தரிடம் தங்கச் சங்கிலியை அறுத்து பறிக்க முயன்ாக கோவையைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்தக் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை திருட்டு சம்பவங்கள் நிகழாத வகையில், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாா்த்திபன் மேற்பாா்வையில், தாலுகா காவல் ஆய்வாளா் ஆனந்தன், உதவி ஆய்வாளா் கணேஷ் மற்றும்

போலீஸாா் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், கோயில் அருகே நின்றுகொண்டிருந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டி தொரைப்பாடியைச் சோ்ந்த ப.மோகன்ராஜ் வைத்திருந்த பணப்பையை 3 பெண்கள் சோ்ந்து திருடியதுடன் திருடியதுடன், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்து அந்தப் பெண்கள் பறிக்க முயன்றனராம்.

அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மூவரையும் பிடித்து விசாரித்ததில், கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி பாபா தெருவைச் சோ்ந்த ரா.மேகலா (38), ஜோ.மஞ்சு (39), அ.காளியம்மாள் (45) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT