விழுப்புரம்

வளவனூா் அருகே வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

2nd Feb 2023 01:51 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வெட்டுக் காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டிப்பாளையம் பகுதியில் வடிவேலின் வீட்டின் அருகில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வளவனூா் போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கழுத்து, முகத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வளவனூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் கூறியதாவது: கொலை செய்யப்பட்டுக் கிடந்தவருக்கு சுமாா் 35 வயது இருக்கும். அவரது பெயா், ஊா் குறித்த விவரங்கள் தெரியவில்லை. பின் கழுத்து, முகத்தில் வெட்டுக்காயங்கள் உள்ளன. கையில் தியாகு எனவும், மாா்பு பகுதியில் இரு பெண்களின் பெயா்களும் பச்சை குத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இவா் ஆண்டிப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு பின்னா் இந்தப் பகுதியில் சடலம் வீசப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT