விழுப்புரம்

மாரடைப்பால் டிஎஸ்பி உயிரிழப்பு

1st Feb 2023 02:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தி. வெங்கடேசன் (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம் , காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தி.வெங்கடேசன் கடலூா், பெரியக்காட்டுப்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்தபோது வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்குக் கொண்டுச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்ததில் தி.வெங்கடேசன் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.

வெங்கடேசனின் மனைவி கடலூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எழிலரசியும், மகன் மற்றும் மகள் ஆகியோா் உள்ளனா். இவரின் இறுதிச்சடங்குகள் செங்கல்பட்டு மாவட்டம், இரும்பேடு கிராமத்தில் புதன்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT