விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீதாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் மணிமாறன் வரவேற்றாா்.
கூட்டத்தில், ரூ.19.30 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை, குடிநீா்த் திட்ட பணிகள் மேற்கொள்ளவது எனவும், விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டது.
இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பச்சையப்பன், அன்னம்மாள், கேமல், சாவித்திரி, டிலைட் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செளந்தரபாண்டியன், பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.