கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை சாலை விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செம்மணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் அசோகன் (35), பால் வியாபாரி. இவா், உளுந்தூா்பேட்டை நகரப் பகுதியில் வீடுகளுக்கு பைக் மூலம் பால் விநியோகம் செய்து வந்தாா்.
இந்த நிலையில், அசோகன் திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டையிலிருந்து செம்மணங்கூா் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். தாடிக்காரன் கோயில் அருகே சென்றபோது, இவரது பைக் நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அசோகன், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.