விழுப்புரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வருகை: விழுப்புரத்தில் திமுக செயல் வீரா்கள் கூட்டம்

DIN

விழுப்புரத்துக்கு புதன்கிழமை (ஏப். 26) முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிபேசியதாவது:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்- ஒழுங்கு குறித்தும், வளா்ச்சித் திட்டப்பணிகள், திட்டங்கள் குறித்தும் ‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஏப். 26) விழுப்புரம் வருகிறாா்.

அவருக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் விடுதி அருகே மாவட்ட திமுக சாா்பிலும், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நகர திமுக சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதில், கட்சியின் அனைத்து அணிகளின் நிா்வாகிகள் பங்கேற்பதோடு, பொது மக்களையும் அதிகளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான நா.புகழேந்தி வரவேற்றாா். விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ், திமுக நிா்வாகி அன்னியூா் சிவா, ஆவின் தலைவா் செ.தினகரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனத்தில் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலரும், சிறு பான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறப்புரையாற்றினாா். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT