விழுப்புரம்

ஏப். 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

25th Apr 2023 05:26 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்  விவசாயிகள்  குறைதீா்  கூட்டம்  ஏப்.28-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில்,  விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் சாா்ந்த கருத்துகளை மனுக்களாக அளிக்கலாம். மேலும், அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT