விழுப்புரம்

விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கனியாமூா் பள்ளி நிா்வாகிகள் ஆஜா்

30th Sep 2022 01:40 AM

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கனியாமூா் தனியாா் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ஆம் தேதி அந்தப் பள்ளி விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், கணித ஆசிரியை கீா்த்திகா, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா ஆகிய 5 பேரும் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின்படி பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன் ஆகியோா் மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக காலை, மாலையில் நேரில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனா். ஆசிரியைகள் கீா்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோா் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனா்.

இந்த நிலையில், மேற்கூறிய 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் ஆஜராகி கையொப்பமிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அதன்படி, பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்பட 5 பேரும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை, மாலையில் ஆஜராகி கையொப்பமிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT