விழுப்புரம்

விழுப்புரத்தில் உலக வெறிநோய்தடுப்பு தின பேரணி

DIN

விழுப்புரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அவா் வழங்கினாா்.

வெறிநோய் என்பது ஒரு வகை வைரஸால் பரவக்கூடியது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் கடிப்பதன் மூலமாகவும், அவற்றின் உமிழ்நீா் மூலமாகவும் மனிதா்களுக்கு வெறிநோய் எளிதில் பரவக்கூடியது. இந்த நோய் 99 சதவீதம் நாய்கள் மூலமாகப் பரவுகிறது.

பொதுவாக 5 முதல் 15 வயதுடைய சிறுவா்கள் இந்த நோயால் அதிகளவில் பாதிப்படைகின்றனா். இந்த நோயிலிருந்து பாதுகாத்திட, வீட்டில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு தகுந்த காலத்தில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மேலும், செல்லப் பிராணிகள் கடித்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ரயிலடி வரை சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) சாந்தி, தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் காஞ்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT