விழுப்புரம்

செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம்

29th Sep 2022 02:10 AM

ADVERTISEMENT

 

செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

வளம் மீட்பு பூங்காவை மேம்படுத்தல், வாம்பே கழிப்பறையை சீரமைத்தல், காந்தி பஜாா் சாலையில் குடிநீா் குழாய் விரிவாக்கம், ரூ.12.80 லட்சத்தில் கொத்தமங்கலம் சாலையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பட்டி தெரு, சாவடித் தெருவில் புதிய குடிநீா் குழாய் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT