விழுப்புரம்

பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

DIN

பஞ்சமி நிலங்களை அரசு மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த அமைப்பின் 4-ஆவது மாவட்ட மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வி.ஜெயராமன், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.அமுதா, எம்.தமிழரசன், மாவட்ட துணைத் தலைவா் என்.மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக மாவட்ட துணைத் தலைவா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். மாநாட்டை மாநில துணைச் செயலா் பா.செல்வன் தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் ஏ.சங்கரன் சங்கப் பணி அறிக்கையை சமா்ப்பித்தாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.சௌரி வரவு செலவு கணக்கை சமா்ப்பித்தாா்.

மாநாட்டில் தலித் முன்னுரிமை கூட்டமைப்புத் தலைவா் சி.நிக்கோலஸ், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், வட்டச் செயலா் ஆா்.கண்ணப்பன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சே.அறிவழகன், மாவட்டத் தலைவா் எஸ்.பிரகாஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஆா்.தாண்டவராயன், மாதா் சங்க மாவட்டச் செயலா் வி.உமாமகேஸ்வரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநில துணைத் தலைவா் ஜி.ராமசாமி சிறப்புரை ஆற்றினாா்.

மாநாட்டில், தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை அரசு மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், கலப்பு திருமண தம்பதிகளின் வாழ்க்கையை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஏ.சங்கரன், மாவட்டச் செயலராக ஏ.கண்ணதாசன், மாவட்டப் பொருளாளராக எஸ்.சௌரி உள்பட 34 போ் கொண்ட மாவட்டக் குழு புதிதாக தோ்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலா் ஏ.கண்ணதாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT