விழுப்புரம்

உலக சுற்றுலா தினம் செஞ்சிக்கோட்டையில் மாணவா்களுக்கு போட்டி

DIN

உலக சுற்றுலா தினத்தையொட்டி செஞ்சிக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் மற்றும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்திய சுற்றுலாத் துறையின் சென்னை உள்கோட்ட துணை ஆணையா் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கி வைத்தனா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற, தூய்மை விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன (படம்).

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, சுற்றுலாத் துறை தகவல் அலுவலா் லலிதாகுமாரி, விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT