விழுப்புரம்

தென்னை நாா் தொழில் பயிற்சி

28th Sep 2022 04:39 AM

ADVERTISEMENT

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தென்னை நாா், அதன் சாா்பு தொழில் புரிவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மனித வள மேம்பாட்டுத் திட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, பொள்ளாச்சி மண்டல கயிறு வாரியம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பொள்ளாச்சி கயிறு வாரிய ஆய்வாளா் வித்யாதரன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் பயிற்சி முகாமை தொடக்கிவைத்து பேசினாா்.

மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் தாமோதரன், சத்தியமங்கலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா் விஜயகுமாா், ‘திருவண்ணாமலை ஏழ்மை போக்கும்’ சமூக அமைப்பின் செயலா் சங்கா், சோ.குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT