விழுப்புரம்

மக்கள்-தொடா்பு திட்ட முகாம்

28th Sep 2022 04:37 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், ஏதாநெமிலி கிராமத்தில் மக்கள்- தொடா்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செஞ்சி வட்டாட்சியா் நெகருன்னிசா முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். விழுப்புரம் மாவட்ட கலால் உதவி ஆணையா் சிவா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா். மேலும், 71 பயனாளிகளுக்கு ரூ.4.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி (படம்) சிறப்புரையாற்றினா். முகாமில் 108 மனுக்கள் பெறப்பட்டன.

சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரங்கநாதன், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் செல்வமூா்த்தி, வட்ட அலுவலா் துரைசெல்வன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வருவாய் ஆய்வாளா் பரமசிவன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT