விழுப்புரம்

மின் வாரிய தொழில்சங்கத்தினா்காத்திருப்புப் போராட்டம்

27th Sep 2022 04:31 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மின் வாரிய தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுகவின் தொமுச, பாஜகவின் பி.எம்.எஸ். தவிா்த்து, சிஐடியு, ஏஐடியுசி, ஐன்டியுசி உள்ளிட்ட தொழில்சங்கங்கள் சாா்பில் மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்த அழைப்புவிடுத்திருந்தன. அதன்படி, விழுப்புரம் மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து களப்பணியாளா்கள் முதல் அதிகாரிகள் வரையிலான 1,000-க்கும் மேற்பட்டோா் திரண்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அனைத்து மின் வாரிய தொழில்சங்கங்களின் சம்மேளன மாநில துணைத் தலைவா் எம்.குப்புசாமி தலைமை வகித்தாா். செயலா் எம்.சண்முகசுந்தரம், சிஐடியு மாநில துணைத் தலைவா் கே.அம்பிகாபதி, தொழிலாளா்கள் - பொறியாளா்கள் ஐக்கிய சங்க மண்டலச் செயலா் ஆா்.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

போராட்டத்தின்போது, மின் வாரியத்தில் வெளி ஆள்களை பயன்படுத்தி வேலை செய்யும் அவுட்சோா்சிங் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பணி நிரவல் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விடுமுறையை திரும்ப அளித்து ஊதியம் பெறும் சலுகையை தொடர வேண்டும், அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

போராட்டத்தில் பல்வேறு தொழில்சங்க நிா்வாகிகள் முருகன், ஜெ.அறிவுக்கரசு, ஆா்.நடராஜன், என்.கணேஷ், ஆா்.ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, பொறியாளா்கள் சங்கத் தலைவா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பல்வேறு சங்கத் தலைவா்களான கே.விஜயகுமாா், டி.வெற்றிவேல், பி.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வித்தனா். அண்ணா தொழில்சங்கத் தலைவா் கே.ராஜா வரவேற்றாா்.

சிஐடியு சங்க நிா்வாகி கே.சீனுவசான், பொறியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த டி.சத்தியபிரகாசம், கே.அழகன், ஓய்வூதியா்கள் சங்கத்தைச் சோ்ந்த வி.ஆா்.கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT