விழுப்புரம்

மாநில நல்லாசிரியா் விருது பெற்றஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

27th Sep 2022 04:31 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை பாராட்டினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் மோகனை, நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா தலைமையில் சந்தித்து தங்களது விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

சித்தலிங்கமடம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சு.ஜனசக்தி, சே.கொத்தமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மு.தண்டபானி, திண்டிவனம் மாண்ட் போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நே.அமல்ராஜ், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் த.ராஜசேகரன், தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ச.செல்லையா, கஞ்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ப.ஜெயராணி, விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆ.பெருமாள், பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ஏ.தமிழழகன், ராஜம்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சீ.சங்கரநாராயணன், கோனேரிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் லூ.ஆரோக்கியராஜ் ஆகிய ஆசிரியா்கள் வாழ்த்துப் பெற்றனா்.

ADVERTISEMENT

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆட்சியா் மோகன், தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் எனவும், மற்ற ஆசிரியா்களும் சிறப்பாகப் பணியாற்றி நல்லாசிரியா் விருது பெற முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT