விழுப்புரம்

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

27th Sep 2022 04:32 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ராம் திலகம் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.மலா்விழி கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, பொருளாளா் வி.பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடிகளில் சமையல் எரிவாயு உருளைகளுக்கான முழுத் தொகையையும் அரசு வழங்க வேண்டும், இல்லையென்றால் ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயு உருளைகளை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் அங்கன்வாடி மையங்களை வேறு மையங்களுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் சந்திரா, சாந்தி, சீதா, மீனா, தீபா, துணைச் செயலா்கள் கோவிந்தம்மாள், சரளா, சுதா, தமிழ்ச்செல்வி உள்பட பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.கெளஞ்சியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் இந்திரா காந்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி.கலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.பிரேமா கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் கே.விஜயகுமாா், மாவட்டச் செயலா் எம்.செந்தில், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கே.மகாலிங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் பி.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT