விழுப்புரம்

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

25th Sep 2022 06:02 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிளியனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளரைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.சௌரிராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.ஐ.சகாபுதீன் முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி கண்டன உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

தேற்குணம் பகுதியில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டோா் மீது அளிக்கப்பட்ட புகாா் குறித்து காவல் உதவி ஆய்வாளா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக எதிரிகளிடம் பொய் புகாா் பெற்று, பாதிக்கப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றாா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 25 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT