விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறுத்தையின் தோல் பறிமுதல்

25th Sep 2022 06:02 AM

ADVERTISEMENT

 

ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தையின் தோலை விழுப்புரத்தில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கோரக்பூரிலிருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்த ரயிலில் ஆய்வு செய்தனா். அப்போது ரயிலின் 4-ஆவது பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனையிட்டதில், அதில் சிறுத்தையின் தோல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதைப் பறிமுதல் செய்தனா்.

ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன், காவல் ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா், பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோலைப் பாா்வையிட்டு, கடத்தலில் தொடா்புடையோா் குறித்து விசாரித்தனா். எனினும், கடத்தலில் ஈடுபட்டது யாா் எனத் தெரியவில்லை.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோலின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். அதை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT