விழுப்புரம்

மாணவா்களிடம் நோய் பரவலைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் தினமும் தூய்மைப் பணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

25th Sep 2022 06:01 AM

ADVERTISEMENT

 

மாணவ, மாணவிகளிடம் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் தினமும் தூய்மைப் பணி நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, பி.என்.தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தூய்மைப் பணியை ஆட்சியா் மோகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி ஒன்றியத்தில் 95 அரசுப் பள்ளிகள், இதேபோல காணை ஒன்றியத்தில் 103, கண்டமங்கலம் ஒன்றியத்தில் 96, கோலியனூா் ஒன்றியத்தில் 114, மயிலம் ஒன்றியத்தில் 86, மரக்காணம் ஒன்றியத்தில் 116, மேல்மலையனூா் ஒன்றியத்தில் 118, முகையூா் ஒன்றியத்தில் 82, ஒலக்கூா் ஒன்றியத்தில் 77, திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் 94, வானூா் ஒன்றியத்தில் 115, வல்லம் ஒன்றியத்தில் 96, விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 88 அரசுப் பள்ளிகள், விழுப்புரம் நகராட்சியில் 13 பள்ளிகள் என மொத்தம் 1,293 பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் மொத்தம் 7,877 போ் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு பள்ளியிலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அவா்களுக்கு எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தினமும் தூய்மைப் பணி நடைபெற உள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதே நோய் தொற்று ஏற்பட முக்கியக் காரணம். எனவே, பள்ளிகளில் கழிப்பறைகளை தினமும் சுகாதாரத்துடன் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT