விழுப்புரம்

திமுக ஒன்றியச் செயலா்கள் கூட்டம்

23rd Sep 2022 10:14 PM

ADVERTISEMENT

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக ஒன்றியச் செயலா்கள் கூட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி பயணியா் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலராக அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தானை போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் ரவிக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பச்சையப்பன், சுப்பிரமணியன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், ராஜாராம், இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நகர திமுக செயலா் காஜா நசீா் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT