விழுப்புரம்

செஞ்சி அருகே நகை திருட்டு வழக்கில் மூவா் கைது

23rd Sep 2022 10:14 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நகை திருட்டு வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி அருகே நரசிங்கனூரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் டான்கேரேஜ் (30). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி உறவினா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, இவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அங்கிருந்த 16 பவுன் தங்க நகைகள், 2 எல்இடி டி.வி.க்களை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தாா்.

அனந்தபுரம் கூட்டுச் சாலை அருகே சிறப்பு உதவி ஆயவாளா் சிவானந்தம், காவலா்கள் லட்சுமி நாராயணன், திருநாவுக்கரசு, செல்லப்பன், ஜெகதீசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு பைக்கில் வந்த மூவரிடம் விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினா். இதையடுத்து, அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியில், டான்கேரஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவா்கள், பண்ருட்டி வட்டம், வாணியம்பாளையத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ் (25), பயத்தாம்பாடியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராமு (24), குச்சிப்பாளையம் கண்டரக்கோட்டையைச் சோ்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் (20) என்பதும் தெரிய வந்தது.

மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 16 பவுன் தங்க நகைகள், எல்.இ.டி. டிவிக்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT