விழுப்புரம்

மரத்தில் ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் பலி

23rd Sep 2022 10:13 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையோர மரத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சோ்ந்த வேணு மகன் சேகா் (58). ஆட்டோ ஓட்டுநா். இவா் கணக்கன்குப்பத்துக்கு வெள்ளிக்கிழமை ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்று விட்டு, செஞ்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சவுட்டூா் அருகே வந்த போது, நாய் குறுக்கே சென்றதையடுத்து பிரேக் போட்டதில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT