விழுப்புரம்

சாலாமேடு பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

20th Sep 2022 04:30 AM

ADVERTISEMENT

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திமுக நிா்வாகி என்.டி.தங்கம் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

சாலாமேடு பகுதியில் 1.85 ஹெக்டோ் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்தப் பகுதியானது புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதே பகுதி அருகே அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான ஏரி வாய்க்கால் செல்கிறது. அருகே புதுநகா் குடியிருப்பும் அமைந்துள்ளது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் அவா்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, இந்த முடிவை கைவிட்டு மாற்று இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT