விழுப்புரம்

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

14th Sep 2022 02:10 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு) விழுப்புரம், கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவா் பி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கே.அம்பிகாபதி, திட்டச் செயலா் ஆா்.சேகா், பொருளாளா் வி.கே.ஏழுமலை, கோட்டச் செயலா் ஆா்.அருள் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், மின் துறையை தொடா்ந்து பொதுத் துறையாக பராமரிக்க வேண்டும், மின் துறையில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், களப் பணியாளா்களுக்கு தரமான தளவாட பொருள்களை வழங்க வேண்டும், 1.2.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சங்கத்தின் கோட்டச் செயலா் கே.கண்ணியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT