விழுப்புரம்

பேருந்து - ஆட்டோ மோதல்: இருவா் பலி

14th Sep 2022 02:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் சென்னையைச் சோ்ந்த இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் அந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியில் சென்றது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது பேருந்து மோதியது.

இதில் ஆட்டோவை ஓட்டி வந்த சென்னை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பொன்முடி மகன் மணிகண்டன் (32), அவருடன் பயணித்த சென்னை ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த ரவி (45) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், ஆட்டோவிலிருந்த சபாபதி (39), மனோகா் (38), ராஜீவ் காந்தி (32) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த ஆட்டோ புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு சென்ற போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT