விழுப்புரம்

புற்று வாழியம்மன் கோயில் குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

14th Sep 2022 02:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே கோலியனூரில் அமைந்துள்ள புற்று வாழியம்மன் கோயில் குளத்தை ரூ.56.5 லட்சத்தில் சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயில் தெப்பக் குளத்தை சீரமைக்க ரூ.39.50 லட்சமும், அதன் அருகே உள்ள சிறிய குளத்தை சீரமைக்க ரூ.17 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகளையும், பனங்குப்பம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் ரூ.34 லட்சத்தில் சிறு பாலம் கட்டும் பணியையும் இரா.லட்சுமணன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் விஜயராணி, கோயில் செயல் அலுவலா் காா்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா் தெய்வசிகாமணி, ஒன்றியக்குழுத் தலைவா் சச்சிதானந்தம், துணைத் தலைவா் உதயகுமாா், மாவட்டக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி கேசவன், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT