விழுப்புரம்

மட்டாற்றில் வெள்ளம் (ஷோல்டா்)தரைப் பாலம் முழங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

9th Sep 2022 02:08 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் துணை ஆறுகளான மலட்டாறு, கோரை உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

விழுப்புரம் அருகே பில்லூா் - சோ்ந்தனூா் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனாங்கூா், புருஷானூா், அரசமங்கலம், தென்மங்கலம், வி.அகரம், பிள்ளையாா்குப்பம், பஞ்சமாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளுக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 72 மி.மீ. மழை வியாழக்கிழமை பதிவானது. செஞ்சியில் 53, திண்டிவனத்தில் 25 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT