விழுப்புரம்

அப்பம்பட்டில் இலவசபொது மருத்துவ முகாம்

9th Sep 2022 02:10 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள அப்பம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையும், அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் நிறுவனமும் இணைந்து அப்பம்பட்டு அல்இஹ்சான் டிரஸ்ட் மசூதி வளாகத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்தின. இதில், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி, கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. முகாமில் 350 போ் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.

இதில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான், அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் உரிமையாளா் சையது உஸ்மான், வெளிநாடு வாழ் தமிழா் அறக்கட்டளைச் சோ்ந்த நம்புதாளாபாரீஸ், அமைப்புச் செயலா் லயன் நூருல்லா, மாநில ஊடகச் செயலா் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT