விழுப்புரம்

அரசூரில் மேம்பாலம் அமைக்கக் கோரிஆா்ப்பாட்டம்

9th Sep 2022 10:56 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே உள்ள அரசூரில் மேம்பாலம், காவல் நிலையம் அமைக்கக் கோரி, இந்திய குடியரசுக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் அ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்லா, மாவட்டப் பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில இணை பொதுச் செயலா் மங்காபிள்ளை, மாநிலப் பொருளாளா் கௌரிசங்கா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசூா் கூட்டுச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அரசூரில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல் நிலையம் அமைக்க வேண்டும். இங்குள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பயணியா் விடுதியை சீரமைத்து, சுற்றுச்சுவா், நூலகம் அமைக்க வேண்டும். அரசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவா் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். பயணிகள் நிழல்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் சக்கரவா்த்தி, ஒன்றியத் தலைவா் ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா் ராஜேஷ், ஒன்றிய மாணவரணிச் செயலா் காா்த்திக் பாலன், பொருளாளா் குமாா், விழுப்புரம் நகரத் தலைவா் சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT