விழுப்புரம்

வல்லம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

31st Oct 2022 02:55 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் ஸ்ரீபால விநாயகா், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீபாலமுருகன் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 29-ஆம் தேதி காலை மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாகபூஜை நடைபெற்றது. மாலை இரண்டாம் கால பூஜையுடன் அங்குராா்ப்பணம், கும்பஅலங்காரம், யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன.

30-ஆம் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் கோபூஜை நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை ஆகியவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமான கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத்தொடா்ந்து மூலவா் மூா்த்தங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் மற்றும் வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அமுதாரவிக்குமாா், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலாமகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT