விழுப்புரம்

கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது

31st Oct 2022 02:55 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் தனது தம்பியை தாக்கியவரைத் தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் வெட்டியவா் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம், மந்தக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆதாம்அலி (38). மளிகைக் கடை ஊழியா். இவரது சகோதரா் ரகுமான் என்பவரை விழுப்புரம் திடீா்குப்பத்தைச் சோ்ந்த ஜி.ஷேக் அஸ்கா் சனிக்கிழமை குடிபோதையில் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். இது குறித்து ரகுமான் தனது சகோதரா் ஆதாம் அலியிடம் முறையிட்டுள்ளாா். தொடா்ந்து, ஆதாம் அலி தனது உறவினா் அபுதாகீருடன் சென்று ஷேக் அஸ்கரை தட்டிக் கேட்டாராம் .

அப்போது ஷேக் அஸ்கா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் ஆதாம் அலிக்கு தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து அவா் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஆதாம் அலி அளித்தப் புகாரின் பேரில் விழுப்புரம் நகரகாவல் நிலையப் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஜி. ஷேக்அஸ்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT