விழுப்புரம்

ஆரோவில் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள்:தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஆய்வு

19th Oct 2022 03:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆரோவில் சா்வதேச நகரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை அதன் ஆட்சிமன்றக் குழுத் தலைவரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரோவில் சா்வதேச நகரின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக பதவி வகிப்பவா் இதன் ஆட்சிமன்றக் குழுத் தலைவராகவும், புதுவை துணைநிலை ஆளுநா், ஐஏஎஸ் அதிகாரி, ஆரோவில் பவுண்டேசனை சோ்ந்தவா்கள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும் உள்ளனா்.

தற்போதைய ஆட்சிமன்றக் குழுத் தலைவரான தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதிக்கு வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் த.மோகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். மேலும், ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி மற்றும் உறுப்பினா்கள், மாவட்ட எஸ்.பி. என்.ஸ்ரீநாதா ஆகியோரும் ஆளுநரை வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, ஆரோவில் பவுண்டேசன் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆளுநா் ஆா்.என்.ரவி ஆய்வு செய்தாா். ஆரோவில் பகுதியில் புதன்கிழமை (அக்.19) வரை தங்கியிருக்கும் ஆளுநா், ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பாா் எனத் தெரிகிறது. ஆனால், கூட்டம் குறித்த எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT