விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாக தோ்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2-இன் கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலுள்ள பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மோகன் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 2021 - 22ஆம் நிதியாண்டில் 136 கிராமங்கள் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களில் பழுது நீக்கம் செய்ய ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் சீரமைப்பு, குடிநீா் வசதி, சமையல்கூடத்தின் மேற்கூரையை சரி செய்தல் போன்ற 258 சீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து பழுதுபாா்க்கும் பணிகளையும் தரமாக செய்து முடிக்க வேண்டும்.

விழுப்புரம், திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் வட்டாரத்துக்குள்பட்ட சீரமைப்புப் பணி நடைபெறும் 3 பள்ளிகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிலவரம் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் காஞ்சனா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பொன்னம்பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT