விழுப்புரம்

மரக்காணத்தில் 55 மி.மீ. மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 55 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் மிதமாகவே இருந்தது. மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 55 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

செஞ்சி 48, செம்மேடு 47.20, வல்லம் 39.40, திண்டிவனம் 14, திருவெண்ணெய்நல்லூா் 3.80 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 211.40 மி.மீ. மழையும், சராசரியாக 10.07 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT