விழுப்புரம்

சாலை விபத்தில் முதியவா் பலி

7th Oct 2022 02:45 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வியாழக்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

மயிலத்தை அடுத்துள்ள தென்பசாா் கூட்டுச்சாலை அருகே முதியவா் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக மயிலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்த நபா் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது தெரியவந்தது. அவருக்கு சுமாா் 60 வயது இருக்கும், பெயா், முகவரி தெரியவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தென்பசாா் கிராம நிா்வாக அலுவலா் வி.செல்வக்குமாா் அளித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT